Economy 2024

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் ஏற்றுக்கொள்ளும் தமையைக்கட்டியெழுப்புதல்: இலங்கை காலநிலை உச்சிமாநாட்டில் பெற்றுக்கொண்ட புரிதல்கள் 

உலகெங்கிலும் உள்ள சமூகங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொருளாதாரங்களுக்கு காலநிலை மாற்றம் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு வலுவான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் எதிர்கொள்ளும் உத்திகள் தேவை. இலங்கை காலநிலை உச்சிமாநாட்டில் இடம்பெற்ற காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் ஏற்றுக்கொள்ளும் தமையைக் கட்டியெழுப்புதல் பற்றிய அமர்வு, இந்த பிரச்சினைகள் பற்றிய தெளிவான புரிதலை வழங்கியது. இந்த அமர்வு நிபுணர்களை ஒன்றிணைத்து, அவர்கள் தங்கள் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்ததுடன், நாம் எவ்வாறு ஒரு திறன்மிக்க எதிர்காலத்தை உருவாக்குவது என்பது பற்றிய ஆழமான புரிதலுக்கு பங்களித்தது. மேலதிக தகவலுக்கு, இலங்கை காலநிலை உச்சிமாநாட்டின் இணையத்தளத்தைப் பார்வையிடவும் (இணையத்தள முகவரி: https://slcs.chamber.lk/).

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனைப் புரிந்துகொள்தல்

காலநிலையின் மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் அதற்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மை என்பது சாத்தியமான சேதங்களைத் தணிக்க மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, சமூகங்கள், வணிகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் காலநிலை மாற்ற செயல்முறைகளைக் குறிக்கிறது. கலாநிதி லலநாத் டி சில்வா குறிப்பிட்டது போல், காலநிலையின் மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் என்பது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு ஆபத்துகள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தப்பிப்பிழைத்து, சிறப்பாக வாழும் திறனாகும். இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மோதல்கள் உட்பட பல இன்னல்கள் மூலம் வரலாற்று ரீதியாக பின்னடைவை எதிர்கொண்ட ஒரு தேசமான இலங்கைக்கு இந்தக் கருத்து இன்றியமையாததாகும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய தன்மையை கட்டியெழுப்புவது தேசிய மட்டத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவை உள்நாட்டு நடவடிக்கைகளில் ஆழமாக வேரூன்றி இருக்க வேண்டும் என்று கலாநிதி டி சில்வா குறிப்பிட்டார். இடர்கள் குறித்த கணிப்பீடு, திட்ட விதிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் சமூகப் பங்கேற்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். உதாரணமாக, 2021-2030க்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் (NDC) செயற்திட்டம் கடலோர பாதிப்பு மதிப்பீடுகள் மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த உள்ளூர் சமூக பங்களிப்புகளை ஒருங்கிணைக்கிறது. இந்த அணுகுமுறை, காலநிலை அபாயங்களுக்கு எதிரான வலுவான மற்றும் சமூகம் சார்ந்த உத்திகள், தேசிய அளவில் மட்டுமல்லாது, உள்ளூரில் செயல்படக்கூடியனவாக இருப்பதை உறுதிசெய்கிறது.

வர்த்தகக் கொள்கையில் காலநிலையை எதிர்கொள்ளும் திறனைக் உள்ளடக்கல்

காலநிலையை எதிர்கொள்ளக்கூடிய திறன் பற்றிய பொதுவான புரிதலில் இருந்து மாறுவதற்கு வணிகக் கொள்கைகளில் அதன் ஒருங்கிணைப்பை ஆராய்வது அவசியம். வர்த்தகக் கொள்கையில் காலநிலையை எதிர்கொள்ளக்கூடிய தன்மையை ஒருங்கிணைப்பது குறித்த டாக்டர் ரவி பெர்னாண்டோவின் விளக்கவுரையானது, காலநிலை அவசரநிலையை வர்த்தகங்கள் ஏற்றுக்கொண்டு, செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மீளுற்பத்தி செய்யமுடியாத எரிபொருள் மூலத்தை நம்பியிருப்பதன் மூலம் புவி வெப்பமடைதலுக்கு வணிகங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்றும், காலநிலை மாற்றத் தாக்கத்தை இல்லாதொழிப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கிக்க வேண்டியது அவசியமென்றும் என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். மீளுற்பத்தி செய்யமுடியாத எரிபொருள் மூலங்களின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை விளக்கிய கலாநிதி பெர்னாண்டோ, இம்மூலங்களினால் வழங்கப்படுகின்ற சக்தி மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் நாம் தங்கியிருப்பதையும், போக்குவரத்து மற்றும் விநியோகத் துறைகள் முழுமையாக அவற்றால் இயங்குகின்றமையையும் சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs), குறிப்பாக சுத்தமான நீர், மலிவு மற்றும் சுத்தமான எரிபொருள் மற்றும் சிறந்த வாழ்க்கைமுறை ஆகியவற்றை நோக்காகக்கொண்ட SDGs 6, 7 மற்றும் 15 இலக்குகளுடன் வணிகக் கொள்கைகளை இணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். நீர்பாவனை மற்றும் கார்பன் வெளியேற்றங்களைக் குறைத்தல், நிலையான மூலவளங்கள் மற்றும் உற்பத்தி நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் காலநிலை இடர் கண்காணிப்பை தங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கல் போன்ற வணிகங்கள் தங்கள் கொள்கைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பகுதிகளை கலாநிதி பெர்னாண்டோ கோடிட்டுக் காட்டினார். வணிகங்கள் பிரச்சினையின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், தீர்வின் ஒரு பகுதியாக தங்களைப் பார்க்க வேண்டும் என்றும், நிலையான செயற்பாடுகளால் பொருளாதார நன்மைகள் கிடைக்குமென்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனைக் கட்டமைப்பதில் அடிமட்டநிலை  முயற்சிகள் 

வணிகக் கொள்கை பற்றிய விவாதத்தை நிறைவு செய்யும் வகையில், அடிமட்டநிலை முயற்சிகள், காலநிலையை எதிர்கொள்ளக்கூடிய திறனில் முக்கியபங்கு வகிக்கின்றன. திரு.வினோத் மல்வத்த, மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய தன்மையைக் கட்டியெழுப்புதல் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துதல் பற்றிய அடிமட்டநிலை ஆய்வுக் கற்கைகளை  பகிர்ந்துகொண்டார். அவரது விளக்கவுரையானது ஆக்கிரமிப்பு உயிரினங்களை அகற்றுவதன் மூலம் இலங்கையில் தேசிய பூங்காக்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் குறித்து கவனம் செலுத்தியது. இந்த முயற்சியானது இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த சூழல்களை நம்பியிருக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கியுள்ளது. திரு. மல்வத்தவின் பணி, மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய திறனை கட்டியெழுப்பும் முயற்சிகளில் சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தத் திட்டங்களில் பங்கேற்க உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதன்மூலம், இத்திறனை மிகவும் திறம்பட மற்றும் நிலையானதாக உருவாக்கமுடியும். இந்த முன்முயற்சிகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்ற பிராந்தியங்களில் மீள்திறனை மேம்படுத்துவதற்கான உதாரணங்களாக பயன்படுத்தப்படலாம்.

விவசாயிகளுக்கான தனிப்பயனுள்ள விவசாய பயிர்ச்செய்கை ஆலோசனைகள்

எதிர்கொள்ளும் திறனில் கவனம் செலுத்துவதும்போது, விவசாயத்தில் தனிப்பயனுள்ள பயிர்ச்செய்கை ஆலோசனைகள் பலனளிப்பவையாகவுள்ளன. தனிப்பயனுள்ள பயிர்ச்செய்கை ஆலோசனைகள் எவ்வாறு விவசாயிகளின் எதிர்கொள்ளும் திறனை கணிசமான அளவில் மேம்படுத்தலாம் என்பது பற்றிய அழுத்தமான கற்கை முடிவுகளை திரு. அமல் குணரத்ன முன்வைத்தார். CBLஇன் தானிய விநியோக முன்முயற்சிள் விவசாயிகளுக்குத் தகுந்த விவசாய வானிலை ஆலோசனைகளை வழங்குவதுடன், அவர்களுக்கு பயிர் இழப்புகளைக் குறைப்பதற்கும் தானியத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. இந்த அணுகுமுறை சிறந்த நீர் பயன்பாட்டு திறன், பூச்சி கட்டுப்பாடு மற்றும் சாகுபடி திட்டமிடலுக்கு வழிவகுத்து, இறுதியில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயத் துறையின் எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்கிறது. 21,000க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளைக் கொண்ட விவசாயிகளின் சமூகத்தில் இந்த முயற்சி உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவாரத்திற்கு ஒருமுறை தனிப்பயனுள்ள ஆலோசனைகளை வழங்குவதன் மூலம், CBL ஆனது விவசாயிகளிடையே விவசாய வானிலை தகவல்களைப் பயன்படுத்துவதை அதிகரித்து, பயிர் இழப்புகளைக் குறைப்பதற்கும் தானியத்தின் தரம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக, இந்த முயற்சியானது நீர் பயன்பாட்டு திறன் மற்றும் கிருமிநாசிகளின் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது. இவை மாறிவரும் காலநிலைக்கு ஏற்ற பயிர் பராமரிப்பு மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கு முக்கியமானவை.

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் தேசியளவிலான திட்டங்களின் பங்கு

பரந்தளவிலான அரசாங்க உத்திகளை ஆராயும்போது, மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் தேசியளவிலான திட்டங்கள் (NAP) இன்றியமையாதவை. இலங்கையில் இத்திட்ட செயல்முறையின் பரிணாம வளர்ச்சி குறித்து கலாநிதி சோனாலி சேனாரத்ன செல்லமுத்து கலந்துரையாடினார். NAPகள், அரசாங்கங்கள் தமது காலநிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த உதவும் முக்கியமான கருவிகளாகும். அரசு மற்றும் சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி, அனைத்து தளங்களினூடாகவும் இத்திட்டமிடலை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை கலாநிதி செல்லமுத்து வலியுறுத்தினார். மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் முயற்சிகளில் தனியார் துறையின் பங்கையும் அவர் குறிப்பிட்டார். முதலீடுகள் மற்றும் புதுமையான தீர்வுகள் மூலம் தேசியளவில் மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதில் வணிகங்கள் கணிசமான பங்கை வகிக்க முடியும் என்பதால், தனியார் துறையின் பங்களிப்பு, மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் அதற்கான நிதியுதவிகளுக்கும் முக்கியமானது.

முடிவுரை

இறுதியாக, இலங்கை காலநிலை உச்சிமாநாட்டில் பகிரப்பட்ட புரிதல்கள், காலநிலை மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மற்றும் எதிர்கொள்ளும் திறனின்  பன்முகத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தேசிய கொள்கைகள், உள்ளூர் சமூக நடவடிக்கைகள் மற்றும் தனியார் துறை ஈடுபாடு ஆகியவற்றைக் கொண்ட கூட்டுமுயற்சி தேவைப்படுகிறது. இந்த மாறுபட்ட உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலமும், எதிர்கொள்ளும்திறன் மிக்க கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலமும், காலநிலை மாற்றத்தால் முன்வைக்கப்படும் சவால்களை இலங்கை திறம்பட எதிர்கொண்டு வலுவான, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நாடாக மாறமுடியும்.

சஞ்சய ஆரியவன்ச
மூத்த பொருளாதார நிபுணர்
இலங்கை வர்த்தக சம்மேளனம்


You may also like